Map Graph

சலார் ஜங் அருங்காட்சியகம்

சாலார்சங் அருங்காட்சியகம் ஐதராபாத்திலுள்ள ஒரு அருங்காட்சியகமாகும். ஏழாவது நிசாம், நவாப் மிர் ஓசுமான் அலிகானின், ஏழாவது நிசாமின் முதன்மை அமைச்சராக, மிர் யுசுப் அலி கான் மூன்றாவது சாலார் சங் 1899 முதல் 1949 வரையில் இருந்தார். இவர் ஒரு சிறந்த கலை இரசனையாளர். இவரது சொந்த முயற்சியினால் சேகரிக்கப்பட்ட கலைநயம் மிக்க பொருட்களே இந்த அருங்காட்சியகத்தில் உள்ளவை. மக்களைக் கவரும் ஒரு முக்கிய இடமாக இது விளங்குகிறது. முதலில் இவ் வருங்காட்சியகம் சாலார்சங் குடும்ப மாளிகையான திவான் டியோரியில்தான் அமைக்கப்பட்டிருந்தது. 1968 ல் தான் முசி ஆற்றின் தென்கரையிலுள்ள புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டது. இந்திய நாட்டிலுள்ள மூன்று தேசிய அருங்காட்சியகங்களுள் இதுவும் ஒன்று. இங்கு உலகெங்கிலுமிருந்து சேகரிக்கப்பட்ட அதிகமான கலைப்பொருட்கள் உள்ளன. ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்திய, மத்திய கிழக்கு, நேப்பாளம், திபெத்து, மியன்மார், தூரகிழக்கு மற்றும் ஐரோப்பிய கலைப் பொருட்களும் சிறுவர் பகுதியும் உள்ளன. இது ஒரு கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். இங்கே யானைத் தந்தம், சலவைக்கல் போன்றவற்றால் செய்யப்பட்ட பல விலைமதிப்பற்ற பொருட்கள் உள்ளன. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய அருங்காட்சியகமும், ஒரு மனிதனால் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்களின் தொகுதிகளில் உலகிலேயே மிகப்பெரியதும் இதுவாகும். கிபி முதலாம் நூற்றாண்டிலிருந்து பல நாகரிகங்களையும் சேர்ந்த மதிப்பு மிக்க சேகரிப்புக்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகம் இந்தியா முழுவதும் பெயர் பெற்றது.

Read article
படிமம்:Hyderabadmuseum.jpgபடிமம்:Commons-logo-2.svg